பார்க்கவகுல முன்னேற்ற சங்கம்

நாட்டில் மனித சமூகம் தோன்றிய காலத்தில் மக்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தின் அடிப்படையில் வாழத் தொடங்கினர். அம்மக்கள், பிற் காலங்களில் குலத்தின் அடிப்படையில் அழைக்கப்பட்டனர்.
அக்காலத்தில்தான் குலம், வம்சம், கோத்திரம், சாதி என காலப்போக்கில் தோன்றின. இயற்கையோடு வாழ்ந்த காரணத்தினால் பார்க்கவன், பகலவன், வொய்யோன், சூரியன், ஞாயிறு என பல பெயர்களைக் கொண்டிருந்தனர், சூரிய குலத்தில் தோன்றியவரே பார்க்கவர்கள் என வரலாறு கூறுகிறது.
பார்க்கவன் என்றால் சுக்கிரன் அவர் சூரியனின் புத்திரராவார். அவ்வியற்கை பெயராலேயே "பார்க்கவகுலம்" எனக் குலப்பெயர் உருவானது.
கி.பி.7ம் நூற்றாண்டு மற்றும் கி.பி.8ம் நூற்றாண்டுகளில் நரசிங்க முனையரையரின் ஆட்சி காலமாகும். அதாவது கி.பி.680லிருந்து, கி.பி.680 வரை இருக்கலாம் என வரையறுக்க முடிகிறது. தொடர்ந்து 6 நூற்றாண்டுகள் பார்க்கவகுல அரசர்களின் ஆட்சி நடந்துள்ளதாக சரித்திரத்தில் காண முடிகிறது.
கடையேழு வள்ளல்களில் 4 வள்ளல்கள் ( பாரிவள்ளல், திருமுடிக்காரி, அதிகன், நல்லி ) பார்க்கவகுலத்தில் தோன்றியவர்கள் என்பதனை சங்க இலக்கியம், கலிங்கத்துப்பரணி, அகநாநூறு, புறநாநூறு, இதிகாசம், கல்வெட்டுகள், செப்பேடுகள், கலித்தொகை, நற்றிணை போன்றவற்றில் காண முடிகிறது.

பார்க்கவகுலம் பாரியின் பரம்பரையினர்தான் என கி.பி.1231ல் எழுதப்பட்ட தெய்வீக மன்னன் செப்பேடும், கி.பி.1210ல் எழுதப்பட்ட திருக்கோவிலூர் மேலமடம் தெய்வீக நரசிங்கராஜ உடையார் செப்பேடும் கூறுகின்றன. அதேபோல், தமிழகத்தில் ஆட்சி புரிந்த முற்கால சோழர்களில் மனுநீதிச் சோழன், முகுந்தன், சிபி சக்கரவர்த்தி, காந்தன், செம்பியன், கரிகாலன், கிள்ளவளவன், நனங்கிள்ளி, தித்தன், பெருங்கிள்ளி, நல்லுதிரன், கோப்பெருஞ்சோழன், கோச்செங்கன் ஆகியோர் சூரிய குலத்தில் தோன்றிய பார்க்கவ இன மன்னர்கள் என பல வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
சங்கத்தமிழ் நூல்களால் போற்றிப் புகழ்பாடுகின்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராகிய முல்லைக்கு தேர்தந்த பாரி மன்னனின் பெயரினைத் தமிழறிந்தோர் அனைவரும் அறிவர். பறம்பு மலைக்குத் தலைவன் முந்நூறு ஊர்களைத் தன்னகத்தே கொண்ட சிங்க நாட்டை ஆண்டவன் அதனால் பெய்யா நாவிற் கபிலர் "பறம் பிற் கோமான் பாரி" என்று புகழ்ந்துரைத்தார்.
இந்நாடு மேற்கு இராமநாதபுரத்தை உள்ளடக்கிய பகுதியாக இன்று விளங்கி வருகிறது. பாரியின் பெரு வீரத்தை விளக்கும் பொருட்டு சிங்கன் போன்று வலிமையுடன் பொருது பகைவரை வென்றமையால் அவன் ஆண்ட நாட்டினைச் சிங்க நாடென வழங்கிச் சிறப்பித்தனர்.
பண்டைய தமிழகம் ஈரமும், வீரமும், வன்மையும், ஈகையும் செறிந்த வளநாடு அதில் நடுநாடு என வழங்கப்பட்ட திருமுனைப்பாடி இன்றைய விழுப்புரம் மாவட்டம் தென் பெண்ணை ஆற்றின் தென்புறம் அமைந்துள்ளது திருக்கோவிலூர் என்னும் நகர். இந்நகரில்தான் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய "காரி" என்கின்ற திருமுடிக்காரி மலையமான் அரசு ஆண்டுவந்தார்.
கி.மு.300 ஆண்டு முதல் கி.பி.200 ஆண்டுவரை சங்ககாலம் (கடைச்சங்கம்) எனலாம். திருமுடிக்காரி அரசாண்ட காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டு என சங்க கால வரலாற்று நூல் அகம், புறம் எனும் நூலில் காணப்படுகின்றது.
கடைச்சங்க காலத்தில் மூவேந்தர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் காலமும் ஆகும். திருமுடிக்காரியின் சமகாலத்து குறுநில மன்னர்கள் பாரி, ஓரி, அதியமான், பெருஞ்சேரல், இரும்பொறை, கிள்ளிவளவன், நெடுங்கிள்ளி, தொண்டைமான், இளந்திரையன், மாவளத்தான் ஆகியோர் ஆவர்.

கேட்டால்தான் கிடைக்கும் எனவே கேட்க வேண்டும், கேட்பதற்கோர் அமைப்பு வேண்டும். வகுப்புரிமை பிரதிநிதித்துவம் அனைத்து துறைகளிலும் நம்மவர் கிடைக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளில் பார்க்கவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை பெற்றே தீர வேண்டும் என்ற சிந்தனை தீ நம்மினப் பெரியோர்களின் நெஞ்சில் சுடர் விட்டது. அதன் விளைவாக அரும்பியதுதான் "பார்க்கவகுல சங்கம்".
1911ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் நாள் மணம்பூண்டி திரு.ம.ரா.குமாரசாமி அவர்களால் திருக்கோவிலூர் மணந்தது. திரு.ம.ரா.கு அவர்களோடு, திருச்சி மேல கற்கண்டார் கோட்டை மே.வே.துரைசாமி உடையார், வெள்ளையூர் சொக்கலிங்க உடையார், மாரண்ட அள்ளி எம்.ஆர்.வெங்கடாசல உடையார், வில்வராயநல்லூர் முத்துக்குமாரசாமி உடையார், திருவாரூர் சிவவடிவேல் உடையார் ஆகியோரின் முயற்சியால் ஸ்ரீஞானியார் சுவாமிகள் தலைமையில் பார்க்கவகுல சங்கத்தின் தொடக்க விழா நடைப்பெற்றது.
அவ்விழாவிலேயே பார்க்கவகுல சங்கத்தின் முதல் தலைவராக மணம்பூண்டி திரு.ம.ரா.குமாரசாமி உடையார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட்டி தொட்டியெல்லாம் சென்று நம்மின ஒற்றுமைக்கும் முன்னேற்றதிற்கும் பாடுபட்டார்.
14.05.1943ம் ஆண்டு மேல் கற்கண்டார் கோட்டை மே.வே.துரைசாமி உடையார் அவர்கள் தலைவராகவும், 19.10.1969ம் ஆண்டு சேலம் திரு.ந.அருணாசல உடையார் அவர்களும், 23.05.1988-ல் ஸ்ரீராமச்சந்திரா பல்கலைகழக நிறுவனர் திரு.என்.பி.வி.ராமசாமி உடையார் அவர்களும், 1999ல் கபிஸ்தலம் திரு.ஆர்.சௌந்தரராஜ மூப்பனார் அவர்களும் தலைவராக செயல்பட்டனர்.

தனி மனித உழைப்பின் சிகரம், ஓய்வரியா உழைப்பாளி, பொறியியல் கட்டிடக்கலையில் கூர்மையான ஞானமுள்ளவர், ஆங்கில மொழியாற்றல் பெற்றவர், சரளமாக சொற்பொழிவாற்றும் திறமை பெற்றவர், தமிழில் கவிதை எழுதும் ஆர்வமிக்கவர், சீரிய பகுத்தறிவுச் சிந்தனையாளர், அவர் தேர்ந்தெடுத்த அத்தனை துறைகளிலும் வெற்றி பெற்றவர், பார்க்கவர்களின் முகவரி, பார்க்கவர்களின் காவலர், கல்வி வள்ளல் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள்.
1968 முதலே சங்கத்தோடு தொடர்புடைய டாக்டர் பாரிவேந்தர் அவர்கள், 1978ம் ஆண்டு மாநில பொதுச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றிய அனுபவத்துடன், 1984ல் சேலம் மாநகரில் நடைபெற்ற பிரமாண்டமான மாநில சங்க மாநாட்டில் கல்வி பற்றி அனைவரும் பாராட்டும் வகையில் சொற்பொழிவாற்றிய பெருமைக்கும் உரியவர்.
15.02.2009ம் ஆண்டு பார்க்கவகுல சங்கத்தின் உயர்மட்டக்குழு தலைவராக டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
03.03.2009ம் ஆண்டு சங்கத்தின் உயர்மட்டக்குழு தலைவர் என்ற முறையில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் திருச்சியில் பொதுகுழுவை கூட்டி அக்கூட்டத்தில் தலைவராக திரு.கோவைத்தம்பி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
31.10.2010ல் திருச்சியில் பார்க்கவகுல சங்கம், பார்க்கவகுல முன்னேற்ற சங்கமாய் டாக்டர் பாரிவேந்தர் அவர்களை நிறுவனராக பரிணாம வளர்ச்சி பெற்று அதன் தலைவராக திரு.ம.சுந்தரராசு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
28.04.2012ல் பார்க்கவகுல சங்கம் தோன்றிதன் 100ம் ஆண்டு விழாவினையும், பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் 2ம் ஆண்டு விழாவினையும் ஒன்றாக இணைத்து விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமையில் மிகப்பெரிய மாநாடாக கொண்டாடப்பட்டது. அதில் பல லட்சம் பார்க்கவ சொந்தங்கள் கலந்து கொண்டனர். அதில் மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
16.02.2013ல் சேலம் முத்தம்பட்டியில் நடைபெற்ற பார்க்கவகுல முன்னேற்ற சங்க பொதுக்குழுவில் மாநிலத் தலைவராக திரு.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களும், பொதுச் செயலாளராக திரு.ஆர்.சத்தியநாதன் அவர்களும், பொருளாளராக திரு.எஸ்.எஸ்.வெங்கடேசன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு சமூகப் பணியில் தொடர்கின்றனர்.

எண் பெற்ற பயன் பெற்ற தொகை
01. கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பருப்பு, போர்வை உள்ளிட்ட பொருட்களுக்கு வழங்கியது. ரூ. 2500000
02. கடலூர், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாணவ மாணவியர்கள் கல்வி கட்டணம் ஆண்டுக்கு ரூ. 70000000
03. திருச்சி இந்திய ஜனநாயக கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அழைப்பிதழ் கொடுக்க சென்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த அமரர். முத்துக்குமார் அவர்களின் இரு குழந்தைகளின் படிப்பு செலவு வருடத்திற்கு ரூ. 75000
04. திருச்சி இந்திய ஜனநாயக கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தைச் சேர்ந்த திரு.மோகன் அவர்களின் வாகனம் விபத்து ஏற்பட்டு பலர் படுகாயம் அடைந்தனர் அவரின் வாகனத்தை சரிசெய்வதற்கு ரூ. 50000
05. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஒன்றியம் உலகங்காத்தான் திருமண மண்டபம் கட்டுவதற்கு ரூ. 200000
06. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் பாதூர் நடுநிலைப்பள்ளிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு ரூ. 200000
07. உளுந்தூர்பேட்டை பார்க்கவன் 100 ஆம் ஆண்டு விழா மாநாட்டில் கலந்து கொண்டு ஊர் திரும்புகையில் சாலை விபத்தில் மரணமடைந்த இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பல்த்தசார் அவரின் குடும்பத்திற்கு நிதியாக ரூ. 100000
08. இராமநாதபுரம் போகலூர் ஒன்றியம் முத்துச்செல்வபுரம் பள்ளியில் கூடுதல் அறை கட்டுவதற்கு ரூ. 400000
09. தேனி மாவட்டம் சிந்தலைச்சேரியில் பார்க்கவன் திருமண மண்டபம் கட்டுவதற்கு ரூ. 100000
10. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியம் புனக்குலம் திருக்கோவில் கட்டுவதற்கு ரூ. 50000
11. புதுக்கோட்டை மாவட்டம் கணபதிபுரம் ஆனந்தராஜ் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லி அவரின் இரு குழந்தைகளின் படிப்பு செலவு ஆண்டிற்கு ரூ. 142000
12. சேலம் மாவட்டம் நரசிங்கபுரம், தாண்டவராயபுரம், அம்மாபேட்டை, கோலாத்துக்கோம்பை ஆகிய பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ. 5000000
13. நாகை மாவட்டத்தில் பார்க்கவன் மங்கல சந்திப்பில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 1 ஜோடிக்கு 1 பவுன் வீதத்தில் 50 ஜோடிகளுக்கு தாலிக்கு தங்கம் கொடுத்தது ரூ. 200000
14. சென்னை மாவட்டம், சூளைமேடு வட்டம் துணை தலைவர் அ.ஜோசப் அவர்களின் மகன் மருத்துவ உதவிக்கு ரூ. 50000
15. தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருக்கருகாவூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட திரு.கு.ராஜாராமன் அவர்களுக்கு வழங்கியது ரூ. 10000
16. பல்லாவரத்தில் அமைந்துள்ள புனிததெராசா மகளிர் மேல் நிலைப்பள்ளியின் 50 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு அனாதை குழந்தைகள் இல்ல கட்டிடம் கட்டுவதற்கு ரூ. 100000
17. அரியலூர் மாவட்டம், டி.பழூர் ஒன்றியம் விழப்பள்ளம் கிறிஸ்தவ தேவாலாயம் கட்டுவதற்கு ரூ. 50000
18. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் அருணகிரிமங்கலம் கோவில் திருப்பணிக்கு ரூ. 100000
19. அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் திருப்பணிக்கு ரூ. 300000
20. அரியலூர் மாவட்டம், ஒட்டக்கோவில் திருப்பணிக்கு ரூ. 200000
21. திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு ரூ. 500000
22. திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், குமுளூர் 18 ஆண்டுகளாக ஓடாத ஆயிர வள்ளியம்மன் திருக்கோவில் திருத்தேர் திருப்பணிக்கு ரூ. 400000
23. திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி பேரூராட்சியில் 27 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த ஸ்ரீ அருள்மிகு சிதம்பரேஸ்வரர் ஆலய ஸ்ரீ ராஜ கோபுரம் புதுப்பிக்க ரூ. 2100000
24. திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம் மேல பெருங்காநால்லுர் தூய வளனார் கிறிஸ்தவ ஆலய கட்டுமான பணிக்கு ரூ. 300000
25. திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் சிட்டிலரை கிராமத்தில் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு ரூ. 100000
26. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம் பத்தாளப்பேட்டை, உத்திரமாதா ஆலயத்திற்கு வழங்கியது ரூ. 200000
27. திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் வெள்ளனூர் கிராமத்தில் அமைந்துள்ள வடிவழகி அம்மன் திருக்கோவில் தேர் சக்கரத்திற்கு இரும்பு சக்கரம் வழங்கி தேரோட்டத்தை துவக்கிவைத்தது ரூ. 200000
28. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் அய்யனாவரம் கிராமத்தில் திருக்கோவில் புதுப்பிக்க ரூ. 50000
29. திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம் நெய்குப்பையில் அமைந்துள்ள வெண்மணி அம்மன் ஆலய திருப்பணிக்கு ரூ. 100000
30. திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம் பி.மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார் மற்றும் அம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ. 100000

  1. பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் கிராமத்திலுள்ள நம்மினத்தை சேர்ந்த தி.மு.க. கிளைச் செயலாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள் மீது போடப்பட்ட பொய்யான பி.சி.ஆர். வழக்கு சங்கத்தின் மூலம் போராடி முறியடிக்கப்பட்டது.
  2. பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், நமையூர் கிராமத்திலுள்ள நம்மினத்தை சேர்ந்த தி.மு.க. கிளைச் செயலாளர் திரு.நாகராஜ் அவர்கள் தி.மு.க.மாவட்ட செயலாளர் திரு.துரைசாமியால் தாக்கப்பட்டபோது திரு.நாகராஜ் அவர்களுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன் அவர்கள் தலைமையில் மாநிலத் தலைவர் திரு.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலையில் மாநில, மாவட்ட, ஒன்றிய கிளையில் உள்ள அனைத்து நிர்வாகிகள் சுமார் 1500 பேர் கலந்து கொண்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் மனு கொடுத்து தக்க தண்டனை வாங்கி தரப்பட்டது. அது முதல் நம்மின மக்களின் மீது பொய்யான பி.சி.ஆர். வழக்கு பதிவதை முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.
  3. புதுக்கோட்டை மாவட்டம், கணபதிபுரம் நம்மினத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஆனந்தராஜ் படுகொலை செய்யப்பட்டபோது பார்க்கவகுல முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களும், ஐ.ஜே.கே பொதுச் செயலாளர் திரு.பி.ஜெயசீலன் அவர்களும் பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திரு.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களும், மாநில பொருளாளர் திரு.எஸ்.எஸ்.வெங்கடேசன் அவர்களும் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் சென்று ஆனந்தராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி படுகொலையை கண்டித்தனர். டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் ஆனந்தராஜின் 2 மகன்களையும் பட்டப் படிப்பு வரை படிக்க வைக்க உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஐ.ஜே.கே மாவட்ட தலைவர் திரு.சீனிவாசன் அவர்கள் தலைமையில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி கொலையாளிகள் மீது வழக்கு பதிவு செய்து விரைவாக கைது செய்ய வைத்தனர்.
  4. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட நம் மக்களை நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களும் ஐ.ஜே.கே பொதுச் செயலாளர் திரு.பி.ஜெயசீலன் அவர்களும் பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திரு.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் திரு.எஸ்.எஸ்.வெங்கடேசன் அவர்களும் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி அரிசி, பருப்பு, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.
  5. திருச்சி மாவட்டம், துறையுர் வட்டம், விசுவாம்பாள் சமுத்திரத்தில் தவறாக புனையப்பட்ட கொலை வழக்கில் இருந்து சமுதாய மக்களை காக்க இலவச சட்ட உதவி மூலம் வழக்கு நடைபெற்று வருகிறது. அவ்வழக்கை பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் நடத்தி வருகிறது. அந்த பிரச்சனையில் திரு.ஜான் பாண்டியன் அவர்கள் தலையிட்டு சாதிக் கலவரமாக மாற்ற இருந்ததை டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலையிட்டு அவருடன் பேசி பிரச்சனை சாதிக் கலவரமாக மாறாமல் தடுத்து நம்மின மக்களை காப்பாற்றினர்.
  6. பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டம், செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட தலைவர் திரு.சிவசங்கர் மீது போடப்பட்ட பேருந்து மீது சேதப்படுத்தல் வழக்கில் இருந்து விடுவித்தல்.
  7. சேலம் மாவட்டம், தெடாவூர் புதூர் நம் இனத்தைச் சேர்ந்த இளைஞர் வண்ணியர் சமுதாய மக்களால் கொலை செய்யப்பட்டு தற்கொலை என்று தவறாக புனையப்பட்ட வழக்கை போராடி கொலை வழக்காக மாற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவைத்தது.
  8. அனைத்து சமுதாய பேரியக்க அமைப்பினருடன் சேர்ந்து பி.சி.ஆர். சட்டம் தவறாக பயன்படுத்துவதை கண்டித்து அச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசை வலியுறுத்தியது.
  9. 2011-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பார்க்கவர்கள் 130 பேர் ஒரே சமயத்தில் போட்டியிட வைத்தது உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
  10. இதுநாள்வரை மாற்றுக் கட்சிக்கு ஓட்டுபோட்ட பார்க்கவர்களை தன் சொந்தக் கட்சியான இந்திய ஜனநாயக கட்சிக்கு ஓட்டு போட வைத்தது.
  11. பார்க்கவர்களை சீண்டாத அனைத்து திராவிடக் கட்சிகளையும் பார்க்கவன் பக்கம் திரும்ப வைத்து அவரவர் இருக்கின்ற கட்சியில் உரிய அங்கீகாரம் பெற வைத்தது.
  12. திருமதி.லீமாரோஸ் மார்டின் அவர்கள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்த போது காவல் துறையை எதிர்த்து காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
  13. நம் இன மக்களுக்கு அவ்வப்போது காவல் துறையால் ஏற்படும் பிரச்சனைகளை முன்னின்று மாநிலத் தலைவர் திரு.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தீர்த்து வைக்கிறார்.
  14. நம்மின மக்களுக்கு இருதயமாற்று அறுவை சிகிச்சை, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை விபத்து ஏற்படும் நேரத்தில் அவசரசிகிச்சை மற்றும் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளை இலவசமாக அன்றாடம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் பரிந்துரையில் செய்யப்படுகிறது. மருத்துவ உதவி என்று கேட்டுவரும் நம்மினத்தைச் சேர்ந்த எவருக்கும் இல்லை என்று கூறியதே இல்லை.
  15. நம்மினத்தை சேர்ந்த பல்வேறு மாணவர்கள் படிப்பதற்கு இலவச கல்வி, மற்றும் கல்வி கட்டண சலுகைகள் ஆண்டிற்கு சுமார் 6 கோடி வரை செய்து வருகிறார்.
எனவே பார்க்கவகுல மக்களுக்காக உழைப்பது பார்க்கவகுல முன்னேற்ற சங்கமே என்பதை உணர்ந்து, இதுவரை அமைதியாகவோ பிற அமைப்புகளிலோ இருப்பவர்கள் உடனடியாக இச்சங்கத்தில் சேர்ந்து நீங்களும் உங்கள் மூலமாக உங்கள் பகுதி மக்களும் பலனடையப் பாடுபடுங்கள்.